பாம்பு கடிச்சதே தெரியல. அப்பா இறப்பு குறித்து நடிகை ரம்யா பாண்டியன் எமோஷனல்..
ரம்யா பாண்டியன்
மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதன்பின் பல படங்களில் நடித்த ரம்யா, குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை பிடித்தார்.

சமீபத்தில் தன்னுடைய அப்பா குறித்தும், அவரது எதிர்பாராத மரணம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
அதில், என் அப்பா பாம்பு கடித்ததால் தான் இறந்துபோனார். ஆனால் பாம்பு கடித்த விஷயமே அவருக்கு தெரியவில்லை. என் அம்மாதான், அவர் காலில் ஏதோ தழும்பு இருக்கிறது, பாம்பு கடித்திருக்கலாம், அவரை ஹாஸ்பிட்டலுக்கு போகச் சொல் என்று என்னிடம் கூறினார். ஏனென்றால் அப்பாவிற்கு என் மீது பாசம் நான் சொன்னால் தான் அப்பா கேட்பார்.
பாம்பு கடிச்சதே தெரியல
ஆனால், அது பாம்பு கடி என்று தெரியாமல் போய்விட்டதால் அதற்குள்ளாக விஷம் ஏறி அவருடைய கிட்னி, ஹார்ட், மூளை என உடல் உறுப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செயல் இழந்துவிட்டது. அவருடைய மூளம் செயலிழப்பதற்கு முன்கூட மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக இருந்த அப்பா, என்னைப் பற்றித்தான் மிகவும் பொறுமையாக டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அன்றுதான் என் அப்பாவும் நானும் கடைசியாக பேசிக்கொண்டது. அதற்கு அடுத்த நாளே நினைவு முழுவதையும் இழந்துவிட்டார். அதன்பின் நினைவே வராமல் அப்படியே அப்பாவும் இறந்துவிட்டார் என்று ரம்யான் தன் தந்தையின் கடைசி நிமிடம் குறித்து பேசியுள்ளார்.