மயோசிடிஸ் நோயின் தீவிர தாக்கத்திற்கு சிகிச்சை!! மிரர் செல்ஃபியில் நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோ..

Samantha Tamil Actress Actress
By Edward Jun 15, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் சமந்தா, கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மயோசிடிஸ் நோயின் தீவிர தாக்கத்திற்கு சிகிச்சை!! மிரர் செல்ஃபியில் நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோ.. | Samantha Drops Her Go To Therapy Routine

திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணம் பலவிதமாக பேசப்பட்டு வந்த நிலையில், சமந்தா பல படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். இடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதிலும் படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது மயோசிடிஸ் நோய்க்காக தீவிர சிகிச்சையை மேற்கொண்டிருக்கும் வீடியோவையும் இறுக்கமான ஜிம் ஆடையில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

[IRUMQK

Gallery