தன் வாய்ப்பை ராஷ்மிகாவுக்கு விட்டு கொடுத்த நடிகை சமந்தா.. எதிர்பார்க்காமல் செய்த விஷயம்!

Samantha Rashmika Mandanna Actress
By Bhavya Nov 02, 2025 12:30 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார்.

இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் 'தி கேர்ள்ஃபிரண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.

தன் வாய்ப்பை ராஷ்மிகாவுக்கு விட்டு கொடுத்த நடிகை சமந்தா.. எதிர்பார்க்காமல் செய்த விஷயம்! | Samantha Suggest Rashmika For An Movie

சமந்தாவின் செயல்!  

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்வாகவில்லை என்று இயக்குநர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், " நான் ஒரு கதையை எழுதும்பொழுது, அதை என் நண்பர்களான வெண்ணிலா கிஷோர், சமந்தா, அதிவி சேஷ், சுஜீத் ஆகியோரிடம் படித்துக் காட்டுவேன்.

இந்த கதையில் சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் முழு கதையையும் படித்து முடித்த சமந்தா, ‘இந்தப் படம் எனக்கு சரியாக இருக்காது.

இந்த கதையை ராஷ்மிகாவிடம் கூறுங்கள் என்றார். அதனால் அந்தக் கதையை ராஷ்மிகாவுக்கு அனுப்பினேன்" என்று தெரிவித்துள்ளார்.     

தன் வாய்ப்பை ராஷ்மிகாவுக்கு விட்டு கொடுத்த நடிகை சமந்தா.. எதிர்பார்க்காமல் செய்த விஷயம்! | Samantha Suggest Rashmika For An Movie