பெண் தோழிகளுக்காக விஜய் ரயிலில் போட்ட சண்டை!! நடிகர் சொன்ன ரகசியம்..

Sanjeev Venkat C Joseph Vijay
By Jai Jul 17, 2026 12:30 PM GMT
Report

நடிகரும் முதலமைச்சர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சுற்றுலா சென்றபோது விஜய் செய்த செயல் பற்றி பகிர்ந்துள்ளார்.

ரயிலில் போட்ட சண்டை

அதில், நாங்க எல்லோரும் கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்றபோது நான் ஒரு பெண்ணை காதலித்தேன். நானும் அந்த பொண்ணும் வேறுவேறு கோட்சில் அமர்ந்து இருந்தோம்.

பெண் தோழிகளுக்காக விஜய் ரயிலில் போட்ட சண்டை!! நடிகர் சொன்ன ரகசியம்.. | Sanjeev Venkat Says Vijay Fought On Train Issues

ரயில் புறப்பட்டதும் சரி, அந்த பெண்ணுடன் போய் உட்காரலாம் என்று சென்றால் என் நண்பர்கள் எல்லோரும் அவருடன் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அதைப் பார்த்ததும் இதயமே நொறுங்கிவிட்டது.

ஜாலியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் ரயிலானது மகாராஷ்ட்ராவில் ஜல்னா ரயில் நிலையத்திற்கு சென்றபோது, ஏதோ டமால் டுமீல் என்று ஒரே சத்தம். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என் தோழன் ஒருவர் அங்கிருந்து ஓடி வந்து, முந்தைய ஸ்டேஷனில் ரயில் நிற்கும்போது யாரோ இருவருக்கு சண்டை என்றான்.

சண்டை போட்ட நபர் நாங்கள் இருந்த கோட்சிலிருந்து இறங்கியதை கண்ட மற்றொரு நபர், தனக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லி எங்கள் பெட்டி என்ணையும் தெரிவித்தார்.

பெண் தோழிகளுக்காக விஜய் ரயிலில் போட்ட சண்டை!! நடிகர் சொன்ன ரகசியம்.. | Sanjeev Venkat Says Vijay Fought On Train Issues

கிட்டத்தட்ட 60, 70 பேர் உருட்டுக் கட்டையுடன் வந்தார்கள். நாங்கள் படித்த விஸ்காம் துறையில் இருபாலர் என்பதால் எங்களுடன் அந்த சுற்றுலாவிற்கு பெண்களும் வந்தனர். அப்போது எங்களுக்கு 17, 18 வயது. வந்தவர்கள் எங்களை அடிக்கிறார்கள், மேல் பெர்த்திலிருந்து விஜய் இரு இருக்கையின் மேல் கையை வைத்து எங்களை அடிக்க வந்த ஒருவரை படத்தில் வருவது போல் ஓங்கி ஒரு மிதி விட்டார்.

அவ்வளவு தான் அந்த நபர் கீழே விழுந்து திரும்ப வருவதற்குள் நாங்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றோம். அதன்பின் போலிசார் அடுத்த ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். அது வாழ்வா சாவா சூழலாக இருந்தது. எங்களை காப்பாற்றிக் கொள்ள விஜய் சண்டை செய்தார், நான் எனக்கு தெரிந்தளவிற்கு அனைவரையும் தள்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் சஞ்சீவ்.