இதெல்லாம் ஒரு படம்.. தனுஷை நேராகவே கலாய்த்த நடிகை!

Dhanush
By Parthiban.A 1 வாரம் முன்
Parthiban.A

Parthiban.A

தனுஷ்

தனுஷ் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் தான். அப்படி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆன படம் தான் வேலையில்லா பட்டதாரி.

அந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். சிவில் எஞ்சினியர் வேலைக்கு தான் போவேன், 50 ஆயிரம் சம்பளம் தரும் கால் சென்டர் வேலைக்கு போக மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒரு விஐபியின் கதை தான் அது.

இதெல்லாம் ஒரு படம்.. தனுஷை நேராகவே கலாய்த்த நடிகை! | Saranya Ponvannan Trolled Dhanush In Vip Sets

இதெல்லாம் ஒரு படம்..

விஐபி படத்தின் ஷூட்டிங் நேரத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் அவரை கூப்பிட்டு, "இதெல்லாம் ஒரு படம்.. இதில் நடிக்க என்னை வேற கூப்பிட்டு இருக்க" என திட்டினாராம். 'நீங்க படம் முடிஞ்சபிறகு பாருங்க" என சொல்லி அவரை சமாளித்தாராம் தனுஷ்.

'எனக்கு ஒரு சீனும் இல்ல.. இதுல என் வீட்டுக்கு வந்து வேற கதை சொல்லி பில்டப் கொடுத்த' என சரண்யா பொன்வண்ணன் மேலும் கூறினாராம். ஆனால் படம் முடிந்து டப்பிங் செய்யும் போது தான் படம் எப்படி வந்திருக்கிறது என பார்த்து அவர் வியந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். 

இதெல்லாம் ஒரு படம்.. தனுஷை நேராகவே கலாய்த்த நடிகை! | Saranya Ponvannan Trolled Dhanush In Vip Sets