ஒரு நாள் தொப்பி போட்டு வேஷம் போடுறவன் நான் இல்லை!! விஜய்யை பங்கமாக கலாய்த்த சீமான்..
விஜய் இப்தார் நோம்பு
நடிப்பு மற்றும் அரசியல் என பிஸியாக வலம் வருகிறார் விஜய். இவர் நடிப்பில் தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளிலும் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிடுவது இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது என அவரது கட்சிக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த இப்தார் நோம்பு நிகழ்ச்சிக்கு பின் விஜய் குறித்து பலர் விமர்சித்து பேசி வருகின்றனர். சமீபத்தில் நாம் தமிழ்ர் கட்சியின் தலைவர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எனக்கு நிறைய உறவுக்காரர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கிறார்கள்.
கலாய்த்த சீமான்
நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது. நான் மக்களின் உணவுக்கானவன் அல்ல அவர்களின் உரிமைக்கானவன். இதுபோன்று செய்வது விஜய்க்கு பிடித்து இருக்கிறது அதனால் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை.
நாட்டிற்கு மக்களுக்கும் இதனால் என்ன பிரச்சனை ? ஒன்றும் இல்லையே அதனால் அதைப் பற்றி பேச தேவை இல்லை என்று சிரித்தபடி கலாய்த்துள்ளார். இதனை பலரும் விஜய்யை கிண்டல் செய்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.