அக்கா தங்கச்சின்னு பாக்காம மாத்தி மாத்தி கூப்புடுராங்க!! நடிகை செந்தில் குமாரி ஓப்பன் டாக்..
செந்தில் குமாரி
சின்னத்திரை சீரியலிலும் படங்களிலும் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை செந்தில் குமாரி. பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வரும் செந்தில் குமாரி, பசங்க படம் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் நடிகை சார்மிளா எடுத்த பேட்டியொன்றில், தங்கை மீனா பற்றி சில விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், நானும் என் தங்கை மீனாவும் பார்க்க ஒரே போல் இருப்பதால் பலர் குழம்புவார்கள். வெளியில் என்னை பார்த்தால் சீரியல் நடிக்க கூப்பிடுவார்கள். ஒருசில சமயத்தில் அவளிடம் சிலர் சீரியல் நடிக்க கூப்பிடுவார்கள்.
மாத்தி மாத்தி கூப்புடுராங்க
அப்படி மாறி மாறி முகத்தை பார்க்காம நடிக்க கூப்பிடுவார்கள். சில சமயம் சீரியலில் நடிக்க எனக்கு கால் பண்ணுவதற்கு பதில் என் தங்கச்சிக்கு கால் செய்வார்கள். யாரை அம்மா ரோலுக்கு கூப்பிட்டீங்க என்னு கத்துவா.
அவள் அம்மா ரோலில் நடிச்சதே கிடையாது, இன்றுவரை தனி ரோலில் தான் நடிச்சிட்டு இருக்கா, அதனால் என்னையே திட்டுவா, இப்பவே ஏன் அம்மா ரோல்ல நடிக்கிறன்னு என்ன திட்டுவா என்று செந்தில் குமாரி தெரித்துள்ளார்.