தூக்கிவைத்து கொண்டாடிய மலையாள சினிமா! நடிகை ஷகிலா தூக்கி எறிய இதுதான் காரணமா?

Malayalam heroine flim
By Jon Mar 08, 2021 11:55 AM GMT
Report

சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்காமல் 80, 90களில் நடிகைகள் தவறான முடிவுகள் எடுத்துவிடுவார்கள். அதாவது அந்தமாதிரியான நடிகையாக நடித்து க்ளாமரில் எல்லைமீறி நடித்து வந்தார்கள். அப்படியாக தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகிலா.

மற்ற மொழிகளில் நடித்திருந்தாலும் நடிகை ஷகிலாவை பெரியளவிற்கு பிரபலப்படுத்தியது மலையாள சினிமா தானாம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது இல்லற வாழ்க்கை குறித்த இயல்பாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னை தூக்கி வளர்த்த மலையாள சினிமாவையே தற்போது விலக்கி வைத்துள்ளதாக ஷகிலா பேட்டி அளித்து இருப்பதால் ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

அதாவது, ஷகிலா தினமும் இரண்டு பெக் அடித்தால்தான் தூங்க முடியும் என்ற மனநிலையை கொண்டவராம். மேலும் தனது குடும்பத்தின் வறுமை சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக தான், தனது உறவினர்களின் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கர்ப்பு குறித்து ஷகிலா கூறியதாவது, ‘பழங்காலத்தில் ஒரு ஆணை, பெண் தலை நிமிர்ந்து பார்த்தாலே அவளின் கர்ப்பு பறிபோய் விட்டதாக கருதுவார்கள்.

ஆனால் தற்போது கர்ப்பு என்றால் உடல் சம்பந்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஒரு ‘ஆபாச குயின்’ என்று பலரும் பார்த்த காரணத்தினால் மலையாள படங்களில், தான் நடிப்பதை தவிர்த்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே மலையாள படங்களில் தன்னிடம் கூறுகின்ற கதை ஒன்றாகவும், ஆனால் எடுக்கப்படும் காட்சிகள் வேறொன்றாகவும் இருப்பதாகவும் அமைந்தது. இதனால் தான் அங்கு சென்று நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.