விஷாலை சுசித்ராவே கூப்பிட்டிருக்கலாம்..இல்லன்னா அவர்...விளாசி தள்ளிய பிரபல நடிகை..
நடிகை சார்மிளா
நடிகர் விஷால் தன் வீட்டு கதவை தட்டி ஒயின் பாட்டிலுடன் வந்ததை பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து நடிகை சார்மிளா சுசித்ராவை கடுமையாக விளாசி பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில், சுசித்ரா நல்ல பாடகி, திறமையானவர், அழகானவர், ஆனால் அவர் ஏன் இப்படி பேசுகிறார். தனுஷ் மற்றும் சில நடிகர்கள் குறித்து பேசினார். அவர்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் விஷாலை பற்றி தவறாக பேசும்போது எனக்கு கோபம் வருகிறது, ஏனென்றால் தனிப்பட்ட முறையில் எனக்கு விஷாலை பற்றி நன்றாகவே தெரியும்.
சாதாரணமாக நாம் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றால் கால் செய்து இருக்கிறீர்களா வீட்டில் என்று கேட்டுவிட்டு செல்வோம். ஆனால் விஷால் போன்ற செலிபிரிட்டி, போன் செய்யாமல் கையில் ஒயின் பாட்டிலுடன் வந்தார் என்று சொல்வதெல்லாம் நம்புறபடியாக இல்லை.
சுசித்ராவே விஷாலை கூப்பிட்டு
அதுமட்டுமின்றி எத்தனையோ ஹீரோயின்கள் இருக்கிறார்கள், நடிகர் சங்கத்த்ல் தலைவராக இருக்கிறார். நல்ல இடத்தில் இருக்கும் நபர், கதவை தட்டினார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை.
ஒன்று சுசித்ராவே விஷாலை கூப்பிட்டு இருக்கவேண்டும், இல்லை என்றால் சுசித்ரா பொய் சொல்கிறார் என்று அர்த்தம் என்று விளாசி பேசியிருக்கிறார் சார்மிளா.