கமல் மகள் என்ற அடையாளம்!! அப்பா பெயரை வெளியில் சொல்ல பயந்த ஸ்ருதி ஹாசன்

Kamal Haasan Shruti Haasan Gossip Today Sarika Tamil Actress
By Edward Nov 14, 2024 11:30 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார். சமீபத்தில், காதலரை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார்.

கமல் மகள் என்ற அடையாளம்!! அப்பா பெயரை வெளியில் சொல்ல பயந்த ஸ்ருதி ஹாசன் | Shruthi Haasan Talks About Kamal Sarika Identity

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் பெற்றோர்கள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் கமல் ஹாசனும் சரிகாவும் தனக்கு பெற்றோராக இருப்பது பெருமையாக இருந்தாலும் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக இருந்திருக்கிறது. வளர்ந்துவரும் போது என் தந்தை பற்றிய கேள்விகளை நான் அதிகம் எதிர்கொண்டேன்.

கமல் மகள் என்ற அடையாளம்!! அப்பா பெயரை வெளியில் சொல்ல பயந்த ஸ்ருதி ஹாசன் | Shruthi Haasan Talks About Kamal Sarika Identity

கமல் மகள்

பலரும் என்னை கமலின் மகள் என்று குறிப்பிட்டார்கள். அது வித்தியாசமான அடையாளத்தை கொடுத்தது, ஆனால் நான் ஸ்ருதி ஹாசன். எனக்கு எனது சொந்த அடையாளம் வேண்டும் என்று நினைப்பேன். யாராவது கேட்டால் இல்லை என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன், நான் பூஜா ராமச்சந்திரன் என்று சொல்வேன். ராமச்சந்திரன் என்பவர் எங்கள் பல் மருத்துவர்.

என் தந்தையும் தாயும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள். அவர்களால் வளர்க்கப்பட்டது என்னையும், என் தங்கையும் கடுமையாக பாதித்தது. பெற்றோர்கள் பிரிந்தப்பின் நான் மும்பைக்கு குடிபெயர்ந்து சென்னைக்கு வெளியே வாழ்க்கையை அனுபவிக்க அது எனக்கு வாய்ப்பாக அமைந்தது.

கமல் மகள் என்ற அடையாளம்!! அப்பா பெயரை வெளியில் சொல்ல பயந்த ஸ்ருதி ஹாசன் | Shruthi Haasan Talks About Kamal Sarika Identity

என் தந்தையின் புகழ் வெளிச்சத்தில் இருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. அதன் காரணமாக சென்னையே எனக்கு பிடிக்கவில்லை, இங்கிருப்பவர்களை வெறுப்பாக உணர்ந்தேன், இருந்தாலும் தந்தையால் எனக்கு கிடைக்கும் பெரிமையை நான் ஒத்துக்கொள்கிறேன் என்று ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.