அமரன்100 : சம்பளம் கொடுத்து பாதி வாங்கிட்டே போயிடுறாங்க!! மேடையில் ஓப்பனாக பேசிய சிவகார்த்திகேயன்..
அமரன்100
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று அமரன் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது அமரன் படம் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியதை அடுத்து அதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன்
அதில், சிவகார்த்திகேயன் கமல் ஹாசனிடம், அமரன் படத்தில் சம்பளம் கரெக்ட்டாக வந்தது சார். ரொம்ப சீக்கிரமே வந்துச்சு சார். அதுவே இது ரொம்ப Rare சார். என்னோட பட ரீலீஸ் நைட் சமயத்தில் அன்பு அண்ணன் ஆஃபிஸில் தான் சார் நான் இருப்பேன். சம்பளம் கொடுப்பது மட்டுமில்ல சார், பாதியை வாங்கிட்டு போயிடுறாங்க, அதுக்குன்னு 2 குரூப் வேற வெச்சிருக்காங்க சார் இங்க.
அப்படி இருக்கும் நேரத்தில் நீங்கள், படம் ஆரம்பிக்கும் 6 மாசத்துக்கு முன்பே சம்பளத்தை கொடுத்தீங்க, அதையும் தாண்டி மரியாதையும் கொடுக்கும் கம்பெனி இருப்பது ரொம்ப அரிது சார் என்று கமல் ஹாசனை புகழ்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் அப்படி சொன்னதை அடுத்து ரசிகர்கள் யார் அப்படி சிவகார்த்திகேயனை நடத்தியது என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
Thug life King Sk 😎🔥
— Priya Sk (@Sivaannafanpri2) February 15, 2025
Pachai ku attack 🤣🤣😜#Amaran100 #Sivakarthikeyan pic.twitter.com/NHjAfHYwtu