உயிரிழந்த செளந்தர்யா..நீடிக்கும் மர்மம்? மரணம் குறித்து கணவர் சொன்ன தகவல்..
செளந்தர்யா
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை செளந்தர்யா கடந்த 2004 ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று வரை பலருக்கும் வருத்தத்தை கொடுத்து வருகிறது.

தன்னுடைய சகோதரர் அமர்நாத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெங்களூரு செல்லும்போது தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் செளந்தயா பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே செளந்தர்யா உயிரிழந்தார்.
சமீபத்தில் செளந்தர்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு தெலுங்கு நடிகர் மோகன்பாபு காரணம் என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோகன்பாபு
இதற்கு செளந்தர்யாவின் கணவர் ரகு அறிக்கை வெளியிட்டு இந்த புகாரை மறுத்தார். நடிகர் மோகன்பாபு, செளந்தர்யா தொடர்பான தவறான செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. அதை நான் மறுக்கிறேன், மோகன்பாபு செளந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தையும் ஆக்கிரமிக்கவில்லை.

எனக்கு தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன்பாபு சாரை அறிவேன். எங்களுக்குள் நல்ல நட்புண்டு, நான் என் மனைவி செளந்தர்யா, மாமியார், மைத்துனன் என எங்கள் குடும்பமே மோகன்பாபுவிடம் மரியாதை வைத்திருக்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர், ஆகவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.