ரூ. 33 ஆயிரம் கோடிக்கு வாரிசு!! SRH அணி காவ்யா மாறனின் 4 கார்கள் இத்தனை கோடிகளா?
ஐபிஎல் 2025
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் சீசன் 18 சில நாட்களுக்கு முன் பிரமாண்ட முறையில் துவங்கியது. முதல் 5 போட்டிகளில் அனைத்து அணிகளிலும் மோதிய நிலையில், முதல் இடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிடித்துள்ளது. வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் ஐபிஎல் போட்டிகளை கொண்டாடும் நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனின் 4 கார்கள் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
4 கார்கள் 25 கோடி
காவ்யா மாறனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 400 கோடி என கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் 4 கார்கள் மட்டுமே சுமார் ரூ. 25 கோடியாம். பென்ட்லி, பிஎம்டபிள்யூ, ஃபெராரி ரோமா, ரோல்ஸ் ராய்ஸ் என 4 உலகின் மிகப்பெரிய பிராண்ட் மற்றும் நட்சத்திர அந்தஸ்த்துடைய கார்களை காவ்யா மாறன் பயன்படுத்தி வருகிறார்.
33 வயதாகும் காவ்யா மாறன் தற்போது ஐபிஎல் 2025 போட்டியில் எஸ் ஆர் எச் அணியினை உற்சாகப்படுத்தி வருகிறார். அவரின் பென்ட்லி பெண்டேக் EWB ரக காரில் முதல் எஸ்யூவி காராக இருக்கிறது, இதன் மதிப்பு ரூ. 6 கோடியாம்.
கோல்ட் மற்றும் பிளாக் நிறத்தினாலான ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் 8 EWB ரக காரின் மதிப்பு 12.2 கோடி ரூபாயாகும். அதேபோல் பிஎம்டபிள்யூ ஐ7 ரக காரின் மதிப்பு 2.50 கோடி ரூபாய். ஃபெராரி ரோமா ரக காரை ரூ. 3.81 கோடிக்கு காவ்யா மாறன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.