மிட்நைட் பார்ட்டியில் நடிகைகள் அடிக்கும் கூத்து!! நயன்தாரா, திரிஷா ஏன்...ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி..
நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உட்பல பலர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து பல நடிகர் நடிகைகள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் கோலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்னை அனுபவித்துவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி ஆடையை கலைந்து போராட்டம் நடத்தியிருந்தார்.
ஸ்ரீரெட்டி
தற்போது அளித்த பேட்டியொன்றில் , இந்த போதைப்பொருள் பார்ட்டியில் நடிகை நடிகர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள். அதுவும் பெரிய நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். போதைப்பொருள் பயன்படுத்தும் முன் அவர்களிடம் காதல் தோல்விகள் குறித்து பேசக்கூடாது என்றும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். போதைப்பொருள் உட்கொண்டால் சிரிப்பு சிரிப்பா வரும்.
நடிகைகள் அதிகளவில் உட்கொண்டால் மறுநாள் காலையில் கேவலமான நாற்றத்துடன் ஷூட்டிங் செல்வார்கள். இதுதொடர்பாக, சில நடிகைகள் குறித்து நடிகர்களே, அவ வாய்ல கேவலமான நாற்றம் அடிக்கும், நல்லா குடிச்சிட்டு வருவான்னு சொல்வாங்க. தோல் பளபளப்பாக இருக்கவும், 3 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தாலும் சோர்வாக இருக்காது என்றும் கண்களுக்கு கீழ் வரக்கூடிய கருவளையங்கள் வராது என்பதற்காகவும் நடிகைகள் அதை எடுத்துக்கொள்வார்கள்.
திரிஷா, நயன் தாரா
இதுமட்டுமின்றி நடிகை திரிஷா, நயன் தாரா ஏன் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பணமும் பிசினஸும் தான் முக்கியம். இதனால் தான் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. குறைந்தபட்சம் ரசிகர்களுக்காக கூட அவர்கள் ட்வீட் போட மாட்டார்கள். நயன் தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறீர்கள், ஆனால் மீடு விவகாரத்தின் போது பெண்களுக்கு ஒரு ட்வீட் போட்டு இருப்பாரா என்று ஸ்ரீரெட்டி கேள்வி கேட்டுள்ளார்.