பட்டம் விட்டு கயிற்றோடு பறந்த இலங்கை இளைஞர்! வைரல் வீடியோ

Srilanka Viral Video Kite
By Parthiban.A Dec 21, 2021 10:30 AM GMT
Report

நம்ம ஊரு பசங்க நூலில் பட்டம் விட்டு ஜாலியாக விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் சில நேரங்களில் மாஞ்சா கயிறு விபத்துகளுக்கும் காரணமாக அமைந்துவிடுவதால் அது தடை செய்ய பட்டு இருக்கிறது. ஆனாலும் விபத்து பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது.

தற்போது இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெரிய பட்டத்தை பறக்கவிட்டு கொண்டிருந்தபோது அந்த கயிற்றிலேயே தூக்கி செல்லப்பட்டார். அவர் கயிற்றை பிடித்தபடியே அதிக உயரத்திற்கு சென்று அதன் பிறகு சற்று கீழே இறங்குகிறார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவர் கையை விட்டுவிட தரையில் வந்து விழுகிறார். இதனால் சிறிய காயங்களுடன் அவர் தப்பி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..