பெஸ்ட் பெஸ்ட்.. தீபாவளிக்கு புது விளம்பரம்!! கங்குவா பாடலை பங்கம் பண்ணிய நெட்டிசன்கள்..
கங்குவா
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது கங்குவா படம்.
வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விருவிருப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட டெல்லியில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை படக்குழுவினர் நடத்தியிருந்தனர்.
Yolo song
அதே சமயம், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி 50 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை பெற்று வரவேற்பை பெற்று வருகிறது.
அதே சமயம் யோலோ பாடலை சிலர் கலாய்த்தபடி மீம்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் சரவணா ஸ்டோர்ஸின் பெஸ்ட் பெஸ்ட் விளம்பர வீடியோவை வைத்து கங்குவா பாடலை கலாய்த்தபடி எடிட் செய்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Diwali new Add Song! 🔥😹#Kanguva pic.twitter.com/fBIWRqV9Vp
— ⚡ᴾᴷ AJITH ᴍᴀғɪᴀ 𝕏 😈 (@Prakash91074476) October 21, 2024