12 வருடமாக ஒரு ஹிட் படத்திற்கு போராடும் சூர்யா, வேற எந்த நடிகருக்கும் நடக்காதது

Suriya Box office Retro
By Tony May 03, 2025 09:30 AM GMT
Report

சூர்யா

சூர்யா இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகர் தான். ஆனால், அவர் 12 வருடங்களாக ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுவும் ஒரு வகையில் உண்மை தான்.

சூர்யாவிற்கு கடைசியாக ஆல் செண்டரிலும் ஹிட் அடித்த படம் சிங்கம் 2 தான். அதன் பிறகு வந்த அஞ்சான், மாஸ்,  சிங்கம் 3, 24, தானா சேர்ந்த கூட்டம், என் ஜி கே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா என அனைத்து படங்களும் ப்ளாப் தான்.

இதில் சிங்கம் 3 மற்றும் 24 நல்ல வசூல் என்றாலும் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அந்த படமும் ப்ளாப் தான். மேலும் 24 மட்டும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்தது.

12 வருடமாக ஒரு ஹிட் படத்திற்கு போராடும் சூர்யா, வேற எந்த நடிகருக்கும் நடக்காதது | Suriya Flop Movie List

ஆனால், கம்ப்ளிட் ஹிட் என்று சொல்லும்படி சூர்யாவிற்கு சிங்கம் 2-விற்கு பிறகு ஏதும் இல்லை என்பதே உண்மை.

சரி கண்டிப்பாக கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ மூலம் சூர்யாவிற்கு கம்பேக் கொடுப்பார் என்று பார்த்தால், இந்த படம் இரண்டாவது நாளே தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களில் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது.

இதனால், கண்டிப்பாக இதுவும் தோல்வியை நோக்கி தான் செல்லும், சூர்யாவின் ஹிட் போராட்டாம் மீண்டும் தொடர்கிறது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.