சிட்னி ஸ்வீனி தமிழில் பேசும் தி ஹவுஸ்மெயிட் படம்!! எப்படி இருக்கு தெரியுமா?
தி ஹவுஸ்மெயிட்
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி நடித்து மார்ச் 19 ஆம் தேதி வெளியான படம் தான் தி ஹவுஸ்மெயிட். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸான இப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகியுள்ளது. ப்ரைடா மெக் ஃபேடன் எழுதிய நாவலில் இருந்து தழுவப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.

சிட்னி ஸ்வீனி
ஒரு கொலையை செய்துவிட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, மேலும் 5 ஆண்டு தண்டனை மீதமுள்ள நிலையில் பரோலில் வெளிவரும் மில்லி (சிட்னி ஸ்வீனி) ஒரு அழகான வீட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு செல்கிறார். நீனா வின்செஸ்டர் (அமாண்டா செஃப்ரேட்) தன்னுடைய வீட்டுக்காக வரும் மில்லியை நேர்கானல் செய்து வேலைக்கு சேர்க்கும் நீனாவின் கணவர் மில்லியை பார்க்கிறார். சிசிலியா என்றும் பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தையும் அவர்களுக்கு உள்ளது.

மில்லி யாரை கொலை செய்துவிட்டு சிறக்கு சென்றார், இங்கே அவருக்கு என்ன மாதிரியான பிரச்சனை இருப்பது என்பதை பரபரபுக்கு கொஞ்சம் கூட குறையாமல் 18 பிளஸ் படமாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இயக்குநர் பால் ஃபெயிக் எடுத்துள்ளார்.
பார்க்கலாமா?
தான் கர்ப்பமாக இருப்பதால் மில்லியை வேலைக்கு சேர்க்கும் நீனா, எல்லா உதவியையும் மில்லிக்கு செய்து அன்புடன் பேசுகிறார். ஆனால் அடுத்த நாளிலிருந்து நீனா ஒரு சைக்கோவைப் போல் நடந்து கொள்ள எல்லாவற்றையும் போட்டுடைத்து, வீட்டையே குப்பைக்காடாக மாற்றி மில்லியை இஷ்டத்துக்கு வேலை வாங்குகிறார்.

அறுதல் கூறும் நீனாவின் கணவருடன் மில்லி நெருங்கிப் பழகத்தொடங்க, ஒரு கட்டத்தில் இருவரும் ஷோ ஒன்றை பார்க்கவும் ஹோட்டலில் ரூம் போட்டு மனைவிக்கு தெரியாமல் பலான வேலையிலும் இறங்குகின்றனர். இந்த விவகாரம் நீனாவுக்கு தெரிய வந்ததா? அதன்பின் நடக்கும் ரியல் ட்விஸ்ட், கடைசி வரை போர் அடிக்காமல் திகிலுடன் செல்லும் விதம், சிறப்பாக உள்ளதால் படத்தை தாராளமாக பார்க்கலாம்.
படுக்கையறை காட்சிகள் முழு நிர்வாணமாக, அதிலும் தமிழ் டப்பிங்கில் கூட சிட்னி ஸ்வீனி சம்பவம் செய்துள்ள நிலையில் குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம், கணவன் மனைவியாக பார்க்கலாம்.
