36 வயதை எட்டிய தமன்னா!! இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
36 நடிகை தமன்னா
நடிகை தமன்னாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் முறிவு ஏற்பட்டது. இதன்பின் முழுமையாக தனது கவனத்தை சினிமா பக்கமும் ஜிம் ஒர்க்அவுட் பக்கமும் திருப்பினார். இதன்மூலம் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.
தமன்னா உடல் எடையை குறைத்து ஆளே மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இவர் ஜிம் ஒர்க்அவுட் செய்து, சரியான டயட் மூலம் உடல் எடையை குறைத்தார்.

மருந்து எடுத்துக்கொண்டதால்தான் இப்படி மாறியுள்ளார் என இணையத்தில் பலரும் நடிகை தமன்னாவை ட்ரோல் செய்து வந்தநிலையில், தனது உடலில் நடந்த மாற்றம் முழுமையாக இயற்கை. எந்த குறுக்கு வழியையும் பயன்படுத்தவில்லை என தமன்னா கூறியுள்ளார். "ஒவ்வொரு ஐந்து வருடமும் பெண்ணின் உடல் மாறிக்கொண்டேதான் இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார்.
சொத்து
இந்நிலையில்,தற்போது பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, டிசம்பர் 21 ஆம் தேதியுடன் 36வது பிறந்தநாளை எட்டியுள்ளார். ஒரு படத்திற்கு 4 முதல் 6 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் தமன்னா, இதுவரை சம்பாதித்து ரூ. 110 முதல் ரூ. 120 கோடி வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் வெர்சோவா கடற்கரை பகுதியில் 14வது மாடியில் அப்பார்ட்மெண்ட் வைத்திருக்கிறார். இதுதவிர 3 வீடுகளையும் சொந்தமாக வைத்துள்ளார்.
43 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 320ஐ, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்இ, 30 லட்சம் ரூபாயில் பஜேரோ, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்திருக்கிறார் நடிகை தமன்னா.