ஜஸ்ட் மிஸ்.. டிவி நடிகைக்கு ஆடையால் வந்த சங்கடம்! வைரல் வீடியோ

Tejasswi Prakash
By Parthiban.A Mar 28, 2022 08:45 AM GMT
Report

ரசிகர்களை கவர் வேண்டு என்பதற்காகவே நடிகைகளின் உடைகள் எப்போதும் பார்த்து பார்த்து டிசைன் செய்வார்கள். அப்படி அவர்கள் அதிகம் செலவு செய்து அணிந்து வரும் உடை சில நேரங்களில் அவர்களுக்கு மோசமான அனுபவங்களை தருவதுன்டு.

சில நடிகைகள் குட்டையாக உடை அணிந்துவந்துவிட்டு மேடையில் அமர கூச்சப்பட்டு சங்கடத்துடன் அமர்ந்து இருப்பதை பார்த்திருக்கிறோம். சில நடிகைகள் ஆடை விலகியதால் சங்கடத்திற்கு ஆளாகியும் இருக்கிறார்கள்.

தற்போது ஹிந்தி டிவி உலகத்தில் முக்கிய நடிகையாக இருந்து வரும் தேஜஸ்வி பிரகாஷ் தனது கேரவனில் இருந்து சில்க் உடை அணிந்து வெளியில் வந்திருக்கிறார்.

அவர் படிக்கட்டில் இறங்கி வந்தபோது உடை சிக்கிக்கொண்டது, ஆனால் அவர் கீழே விழாமல் தப்பித்துவிட்டார். ஒரு வேளை அந்த உடை கிழிந்திருந்தாலும் அவருக்கு பெரிய சங்கடமாக போயிருக்கும். நல்ல வேளை நூலிழையில் தப்பிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.