துணிவு இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா.. மோசமாக கலாய்த்த ப்ளூ சட்டை
Ajith Kumar
Blue Sattai Maran
Thunivu
By Parthiban.A
ஹெச் வினோத் எப்போதும் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து படமாக்குபவர். அவரது முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது அஜித்தை வைத்து ஹெச் வினோத் மூன்றாவது முறையாக இயக்கி இருக்கும் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. தற்போது இணையத்தில் அந்த ட்ரைலர் தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது.
படம் காப்பியா?
இந்நிலையில் இயக்குனரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தற்போது துணிவு படம் ஹாலிவுட் படமான Inside Man -ன் காபி என்பது போல மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
அந்த ட்விட் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!https://t.co/bq9Id46L0s
— Blue Sattai Maran (@tamiltalkies) December 31, 2022