அது துளி கூட உண்மையில்லை: த்ரிஷா கோபமாக கொடுத்த விளக்கம்
Trisha
By Parthiban.A
நடிகை த்ரிஷா ஆரம்பத்தில் மாடலிங் செய்து பாப்புலர் ஆகி மிஸ் சென்னை பட்டம் வென்று, அதன் பின் சினிமாவில் நடிகையாக களமிறங்கியவர். அவர் நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இருப்பினும் தற்போதும் அவர் அதே ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது ராங்கி என்ற படத்தில் நடித்து இருக்கும் அவர், அதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார்.
த்ரிஷா அரசியலில் நுழைந்து, தேசிய கட்சி ஒன்றில் இணைய இருப்பதாக வந்த செய்தி பற்றி ஒரு பேட்டியில் அவரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அதில் துளி கூட உண்மை இல்லை, எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
