திரிஷா தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதாவா? அரசியல் குறித்து இப்படி சொல்லியிருக்காரா?

Trisha Tamil Actress C Joseph Vijay
By Jai May 14, 2026 11:30 AM GMT
Report

திரிஷா

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, கருப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாத்துறையில் பயணித்து வரும் நடிகை திரிஷா, விஜய் - திரிஷா விவகாரம் பெரியளவில் பேசப்பட்ட நிலைது.

திரிஷா தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதாவா? அரசியல் குறித்து இப்படி சொல்லியிருக்காரா? | Trisha S No Politics Entry Amid Vijay Political

சட்டமன்ற தேர்தல் வந்த உடனே திரிஷா விஜய் வீட்டுக்கு முதல் ஆளாக சென்று வாழ்த்தினார். அதேபோல் முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து முதல் வரிசை இருக்கையில் உட்கார்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

விஜய் மேடையில் பேசபேச திரிஷா எமோஷனலாக, அந்த வீடியோவும் டிரெண்ட்டானது. இது ஒரு பக்கம் இருக்க, திருச்சி கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக திரிஷாவை விஜய் களம் இறக்குவார் என்ற பேச்சுகள் எழுந்தது.

திரிஷா தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதாவா? அரசியல் குறித்து இப்படி சொல்லியிருக்காரா? | Trisha S No Politics Entry Amid Vijay Political

கண்டிப்பாக திரிஷா, தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதா என்றும் அடித்து கூறி வருகிறார்கள். அதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் திரிஷாவின் பழைய பேட்டியொன்றில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

வாய்ப்பே இல்லை

அதாவது பொன்னியின் செல்வன் பட பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திரிஷா, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, நான் அரசியலுக்கு வரமாட்டேன், அவரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால் அதில் நான் எதுவுமே செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.