வீட்டுக்கு வந்த சந்தானத்தை பாத்ரூம் போக சொன்ன மனோகர், எந்த மனுஷனும் இப்படி பண்ணிருக்க மாட்டான்ப்பா
சந்தானம்-மனோகர்
சந்தானம் விஜய் டிவி லொல்லு சபா மூலம் மிகப்பிரபலம் அடைந்தவர். அதிலிருந்து சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் அறிமுகமாகி பல வருடங்கள் காமெடியனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தார்.
ஆனால், திடீரென இவர் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு காமெடியனாக இனி நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்தார்.
பிறகு தன் லொல்லு சபா டீம்-யை அருகில் வைத்துக்கொண்டு ஒரு சில காமெடி படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றியும் பெற்றார்.
இதில் சந்தானத்துடன் செம கலாட்டா செய்பவராக மனோகர் பல படங்களில் வருவார், அவரை ஒரு முறை வீட்டில் சந்திக்க சந்தானம் தன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
மனோகரும் முதல் முறையாக வீட்டிற்கு வந்துள்ளீர்கள் காபி, டி சாப்பிடுங்க என்று சொல்ல, சந்தானம் அதெல்லாம் வேண்டாம்ப்பா என்று கூறியுள்ளார்.
அட பரவாயில்லை பர்ஸ்ட் டைம் வீட்டிற்கு வந்துள்ளீர்கள், அட்லீஸ்ட் பாத்ரூம் ஆவது போயிட்டு போங்க என்று சொல்ல, சந்தானம் ஷாக் ஆகிவிட்டாராம்.
உலகத்தில் எவனும் இப்படி சொல்லிருக்க மாட்டான் என ஒரு பேட்டியில் இதை பகிர்ந்துள்ளார்.
You May Like This Video