என்னால முடியல.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படுதோல்வியால் வைகை புயல் எடுத்த முடிவு
வடிவேலு இம்சை அரசன் 2 படத்தில் இருந்து பாதியில் வெளியேறியதால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு அவருக்கு தமிழ் சினிமாவில் ரெட் கார்டு போடப்பட்டது. அதனால் பல வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்காமல் தான் இருந்தார். அதன் பின் தற்போது மீண்டும் அவர் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அவர் ஹீரோவாக கம்பேக் கொடுத்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில் வடிவேலு அளித்த பேட்டியில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்விக்கு youtube விமர்சகர்கள் தான் காரணம் என தெரிவித்து இருக்கிறார். அவர்கள் தான் சதி செய்து படத்தை பற்றி தவறாக வதந்தி பரப்பி வருகிறார்கள் என தெரிவித்து இருக்கிறார் வடிவேலு.
திறந்தவெளி கக்கூஸ் போல youtubeல் கண்டதை பேசும் இவர்களை அரசு எதாவது செய்ய வேண்டும் என வடிவேலு மேலும் கேட்டிருக்கிறார்.
என்னால முடியல.. இனி ஹீரோவாக நடிக்கமாட்டேன். அடுத்து சந்தரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் காமெடியனாக மட்டுமே நடிக்கிறேன் என வடிவேலு கூறி இருக்கிறார்.
