தூக்கில் தொங்கிய சின்னத்திரை நடிகை! எழுதி வைத்த லெட்டர் மூலம் சிக்கிய ex காதலர்
நடிகை தற்கொலை
நடிகர்கள் தற்கொலை இந்தியாவில் தொடர்கதை ஆகி விட்டது. தற்போது ஹிந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் செய்தி ரசிகர்களை அதிர வைத்து இருக்கிறது.
Yeh Rishta Kya Kehlata Hai உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார்.

சிக்கிய முன்னாள் காதலர்
வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசுக்கு புகார் வந்ததும் அவர்கள் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தை வைத்து தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். வைஷாலியின் முன்னாள் காதலர் தொடர்ந்து அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்தது தெரியவந்திருக்கிறது.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் வைஷாலிக்கு அபிநந்தன் என்ற கென்யாவை சேர்ந்த டாக்டர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பின் திருமணத்தை வைஷாலி நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

