விக்னேஷ் சிவனை நம்ப வைத்து ஏமாற்றிய அஜித்..என்ன நடந்தது தெரியுமா?

Ajith Kumar Vignesh Shivan
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பல வசூல் சாதனைகளை நிகழ்த்து வருகிறது.

இதைதொடர்ந்து அஜித் குமாரின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி தொடங்க இருப்பதாக அறிவித்த நிலையில் படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏமாற்றிய அஜித்

விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கு, லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லையாம். இதனால் இப்படத்தின் கதையை மாற்ற கூறி லைக்கா நிறுவனம் கூறியுள்ளதாம். ஆனாலும் விக்னேஷ் சிவன் படத்தின் கதையை மாற்றாததால் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் விக்னேஷ்சிவனை நம்ப வைத்து ஏமாற்றியதாக சமூக வலைத்தளங்களில் அஜித்தை தாக்கி வருகிறார்.