பிகில் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பிரஜூனாவா இது!! இப்படி வளர்ந்துட்டாங்க..
சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்த சில ஆண்டுகளே வளர்ந்து அப்படியே ஆளே மாறிவிடுவார்கள். அந்தவகையில் அனிகா, ரவீனா தாஹா, எஸ்தர் அனில் வளர்ந்து அப்படியே ஆளே மாறிவிட்டார்கள். தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்திருப்பவர் தான் குட்டிப்பெண் நட்சத்திரமான பிரஜூனா சாரா.
நடிகர் விஜய் நடிப்பில் 2019ல் வெளியான பிகில் படத்தில் மேரி என்ற குட்டி நட்சத்திர ரோலில் நடித்து பிரபலமானர் பிரஜூனா. இப்படத்தினை தொடர்ந்து கார்கி, ஜடா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரஜூனா, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு கிரிக்கெட் பயிற்ச்சியையும் மேற்கொண்டு வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் பாடலுக்கு வித்தியாசமான முறையில் நடனமாடியிருக்கிறார். அவரை பார்த்து பலர் பிகில் குட்டிப்பெண்ணா இது? இப்படி வளர்ந்துட்டாரே என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.