அஜித்தை மறைமுகமாக நக்கல் செய்த விஜய்.. மேடையில் இப்படி சொல்லிட்டாரே
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வழக்கம்போல குட்டி கதை சொன்னார். அதற்காக தான் மொத்த ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்த நிலையில் மொத்த அரங்கமும் ரசிகர்கள் சத்தத்தால் அதிர்ந்தது.
வாரிசு குடும்ப உறவுகள் பற்றிய கதை என்பதால் 'அன்பு என்றால் என்ன என்பது பற்றி ஒரு குட்டி கதை சொன்னார் விஜய்.
அதற்கு பிறகு பேசும்போது தொகுப்பாளர் ராஜு சில கேள்விகள் விஜய்யிடம் கேட்டார். உங்களுக்கு இருக்கும் போட்டியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன விஜய் இன்னொரு குட்டி கதை சொன்னார். தனக்கு யார் போட்டி என்பது தான் அது.

போட்டியாளர் யார்..
"1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார். போக போக எனக்கு ஒரு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் வெற்றி மேல இருக்குற பயத்துனால நானும் வளர ஆரம்பிச்சேன். நான் போகும் இடத்துக்கு எல்லாம் அவரும் வந்து நின்னரு. நான் வளர்வதற்கு காரணமாக இருந்தார்."
"அவரை தாண்ட வேண்டும் என்கிற முயற்சியில் நானும் போட்டி போட்டுட்டே இருந்தேன். அந்த போட்டியாளர் உருவான வருடம் 1992, அவரது பெயர் ஜோஸப் விஜய். இதுபோல நீங்களும் உங்களுடனேயே போட்டி போடுங்க" என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் விஜய்.
நடிகர் அஜித்தை பற்றி தான் பேசுகிறார் என எல்லோரும் நினைத்த நிலையில், அந்த போட்டியாளரும் நானே என விஜய் வைத்த ட்விஸ்ட் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
அஜித்தை ஒரு போட்டியாளராக கூட விஜய் கருதவில்லையா?, இப்படி நக்கலாக பேசி இருக்கிறாரே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.