வெளியில் தலைக்காட்டாத விஜய் மனைவி சங்கீதா!! அடையாளம் தெரியாமல் போன சங்கீதா..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், 1999ல் லண்டன் வாழ் தமிழ் பெண்ணான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஜேசன் சஞ்சய், திவயா ஷாஷா என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பின் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், எங்கு சென்றாலும் மனைவி சங்கீதாவை உடன் அழைத்து சென்று வந்தார்.
சமீபகாலமாக சங்கீதாவிற்கு விஜய்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்து வாழ்ந்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய் பட விழாக்களில் கூட சங்கீதா கலந்து கொள்வதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், பல ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷாவுடன் நடித்தது முத்தக்காட்சியில் நடித்தது கூட சங்கீதாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் விஜய்யைவிட்டு சற்று தள்ளி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா கடைசியாக சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் நடித்த மாவீரன் படத்தினை பார்க்க தியேட்டருக்கு வந்தார். அப்போது வெளியில் தலையை காட்டிய சங்கீதா பல மாதங்கள் கழித்து தற்போது வெளியில் வந்துள்ளார். இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர், தருண் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.
நேற்று இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில், ரஜினி, கமல், சூர்யா, மணிரத்னம் - சுஹாசினி, கார்த்தி, நயன் - விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சிக்கு விஜய்யின் மனைவி சங்கீதாவும் தன் தோழிகளுடன் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். விஜய் கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஷ்யாவில் இருப்பதால் சங்கர் மகள் திருமணத்திற்கு தான் வரமுடியாது என்பதால், சங்கீதாவை அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
You May Like This Video
![Gallery](https://cdn.ibcstack.com/article/36b63d56-5e4d-4fc0-ae35-7ea0a79dd176/24-661def762a4d1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/78cf39fa-f05c-4b71-b1a2-0fc3bbeb701a/24-661def76ac94b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5715f0c7-e537-4f84-8a64-ad7a86127d2a/24-661def772ff53.webp)