ஒரு கோடி ரூ. சும்மா கிடைக்குமா.. சர்வைவர் விஜயலக்ஷ்மி வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ

Vijayalakshmi survivor Tamil
By Parthiban.A Dec 13, 2021 08:30 AM GMT
Report

 ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் கடந்த மூன்று மாதங்கள் எந்த வசதியும் இல்லாத தீவில் தான் போட்டியாளர்கள் இருந்து வந்தனர். உணவு, இருப்பிடம் என எதுவும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து ஷோவில் பங்கேற்று வந்தனர்.

ஆரம்பத்தில் பிக் பாஸுக்கு போட்டியாக இந்த ஷோ வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெஸ்பான்ஸ் சுமாராக தான் இருந்தது. இந்நிலையில் நேற்று இறுதி ஷோ ஒளிபரப்பப்பட்டது. அதில் விஜயலக்ஷ்மி தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது காலில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை காட்டி உள்ளார். "Nothing worth having comes easy" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

எதுவும் ஈசியாக கிடைத்துவிடாது என தான் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பரிசு ஒரு கோடி ரூபாய்.. சும்மா கிடைக்குமா.. என சிலர் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.