3 வருஷமாக தயாரிப்பாளரை கதறவிடும் விக்ரம் பட இயக்குனர்!

Vikram Cobra Ajay Gnanamuthu
By Parthiban.A Feb 16, 2022 04:30 PM GMT
Report

விக்ரம் நடிப்பில் அடுத்த வர இருக்கும் படம் கோப்ரா. அந்த படம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடந்தது. ஆனால் இடையில் பல மாதங்கள் லாக்டவுன் போடப்பட்டதால் ஷூட்டிங் அதிகம் தடைபட்டது.

மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ஷூட்டிங் முடிந்து இருக்கிறது. போடப்பட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இயக்குனர் இழுத்துவிட்டிருக்கிறார் என தற்போது விமர்சனம் எழுந்து இருக்கிறது.

ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைக்கும் வீடியோ வெளியிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் விக்ரமுக்கு மட்டும் நன்றி கூறி இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

இது ஒருபுறம் என்றால் கோப்ரா படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என தயாரிப்பாளர் முடிவாக இருக்கிறாராம். போட்ட காசை எடுக்கவேண்டும் என்றால் ஓடிடியில் வெளியிட்டால் முடியாது என தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.