ரக்ஷனுடன் தொடர்பில் இருக்கிறேன்னு தப்பு தப்பா வீடியோ.. கதறும் பிரபல் தொகுப்பாளினி ஜாக்குலின்..
விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக பணியாற்றி தன்னுடைய வித்தியாசமான குரலால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் விஜே ஜாக்குலின். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் ஜாக்குலின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறியிருக்கிறார்.
அந்தவகையில், பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். என்னோடு காதல் கிசுகிசுவில் ரக்ஷனோடு பேசும் போது அதற்கான பதிலை நான் கொடுத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு விசயம் நடக்கவே இல்லை, அப்போ எதுக்கு பதில் சொல்லணும் என்று தோன்றும். தர்ஷன் எனக்கு நல்ல ஃபிரெண்ட், அவர் குடும்பமும் அவரது மனைவியும் நல்ல ஃபிரெண்ட் என்று கூறியிருந்தார்.
மெலும், தன்னை ஒரு லெஸ்பியன் என்று கமெண்ட் செய்து வருவதை நினைத்து கடுப்பாகிவிட்டேன் என்றும் ரக்ஷனுடன் தொடர்புபடுத்தி பேசுவது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ரக்ஷன் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட், ஏன் தப்பு தப்பா பேசி வீடியோ போடுறீங்க என்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு அதுதான் ரியாலிட்டி என்று பலர் நினைத்து கொண்டு கருத்துக்கள் தெரிவிப்பதை நான் கண்டுக்கொள்ளவே மாட்டேன் என்று கடுப்பாகி பதிலளித்திருக்கிறார் விஜே ஜாக்குலின்.