விஷாலுக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் நடக்குமா? இப்போ இப்படி ஒரு பிரச்சனையா
Vishal
Prabhas
By Parthiban.A
நடிகர் விஷாலுக்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக தான் வலம் வருகிறார்.
இருந்தாலும் நான் காதல் திருமணம் மட்டும் தான் செய்வேன் என டீனேஜ் பையன் போல எல்லா பேட்டிகளிலும் கூறிக்கொண்டிருக்கிறார் அவர்.
அது மட்டுமின்றி 'எப்போ திருமணம்?' என அவரிடம் கேட்டால், "தெலுங்கில் பிரபாஸ் முதலில் திருமணம் செய்யட்டும், அதற்கு பிறகு நான் செய்கிறேன்" என விஷால் ஒரு பேட்டியில் பதில் அளித்தார்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸிடம் 'திருமணம் எப்போது?' என கேட்டதற்கு, 'நிச்சயம் திருமணம் செய்வேன். ஆனால் அது எப்போ என எனக்கே தெரியாது' என கூறி இருக்கிறார்.
அதனால் விஷால் திருமணம் இந்த ஜென்மத்தில் நடக்குமா என நெட்டிசன்கள் கிண்டலாக கேட்டு வருகின்றனர்.
