த்ரிஷா வாயை திறந்தாலே பொய்.. பள்ளி படிக்கும்போது வாய்க் கூசாமல் இப்படியா சொன்னார்!
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களை கடந்துவிட்டார். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவருக்கு தற்போது 39 வயதாகும் நிலையில் எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால் அது பற்றி த்ரிஷா வாய் திறக்கவே இல்லை.
த்ரிஷா பள்ளி படிக்கும் காலத்திலேயே மாடலிங் செய்ய வந்துவிட்டார். அப்போது அவர் இதையும் ட்ரை செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் வந்தாராம். செட் ஆனால் தொடரலாம், இல்லை என்றால் விட்டுவிடலாம் என்று தான் மாடலிங் செய்ய தொடங்கினார்.

ஆனால் அப்போது அளித்த பேட்டியில் த்ரிஷா தான் எப்போதும் நடிகையாக மட்டும் ஆகமாட்டேன் என கூறி இருக்கிறார்.
இப்படி தான் சொல்வீங்க ஆனால் பின்னர் நடிக்க வந்துடுவீங்க என தொகுப்பாளர் கிண்டலாக கேட்க, நான் உறுதியாக சொல்கிறேன் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறி இருக்கிறார்.
வாயை திறந்தாலே பொய் என நெட்டிசன்கள் அவரை விமர்சித்திருக்கிறார்கள். த்ரிஷா பேட்டியை நீங்களே பாருங்க..