ப்ரெஸ்னா இஷ்டத்துக்கு கேப்பீங்களா.. கோலி பற்றி அப்படி என்ன கேட்டுட்டாரு?

Virat Kohli Babar Azam
By Parthiban.A Dec 14, 2021 03:30 AM GMT
Report

பாக்கிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்து டி20 தொடரில் மோத இருக்கின்றன. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் pre-match press conferenceல் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

டி20 சீரிஸ் பற்றிய கேள்விகளுக்கு எல்லாம் நன்றாக தான் அவர் பதில் கூறினார். ஆனால் அவரிடம் விராட் கோலி பற்றிய ஒரு ரிப்போட்டர் கேள்வி கேட்டது தான் பிரச்சனை. ”உலக கோப்பை நடந்தபோது பாபர் அசாம் கோலி உடன் போசிக்கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி இருந்தது.

அப்போது இருவரும் என்ன பேசிக்கொண்டீர்கள். தற்போது கேப்டனாக நீக்கப்பட்டு கடினமான நிலையில் இருக்கிறார் அவர்” என்று தான் ரிப்போர்ட்டர் கேள்வி கேட்டார். குறுக்கிட்ட டீம் மேனேஜன் இந்த டி20 சீரிஸ் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் என கூறினார்.

‘நான் எதுவும் சர்ச்சையாக கேட்கல. அவர் விருப்பம் இருந்தால் பதில் சொல்லட்டும்’ என நிருபர் கூறினார். அவருக்கு பதில் அளித்த பாபர் அசாம் ‘நாங்கள் பேசிக்கொண்டது உண்மைதான். ஆனால் என்ன பேசினோம் என்பதை ஏன் நான் போது வெளியில் சொல்ல வேண்டும்’ என அந்த நிருபருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.