பாகுபலி படத்தையே நீங்க அப்படி தான் சொன்னீங்க.. தமிழ் மீடியாக்களை கலாய்த்த ராஜமௌலி
தென்னிந்தியா சினிமாவை பாலிவுட் திரும்பி பார்க்கும் அளவுக்கு செய்த படம் என்றால் அது பாகுபலி தான். அந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி உடன் பணியாற்ற வேண்டும் என்று பாலிவுட் நட்சத்திரங்களே வாய்ப்பு கேட்க தொடங்கிவிட்டனர்.
தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தினை ராஜமௌலி இயக்கி முடித்திருக்கிறார். அந்த படத்தின் பிரெஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ராஜமௌலியிடம் பல்வேறு கேள்விகளை மீடியா நபர்கள் கேட்டனர்.
நீங்கள் ஏன் தெலுங்கில் படம் எடுத்து தமிழில் டப் செயிரீங்க, தமிழிலேயே எடுக்கலாமே என ஒரு நிருபர் கேட்டார். அதற்க்கு அவர் 'நான் பாகுபலி படத்தை தெலுங்கு மட்டுமின்றி தமிழில் கூட தனியாக ஷூட் செய்தேன். ஆனால் அதையே நீங்க டப்பிங் படம் என்று தான் பேசுனீங்க. அது எனக்கு வருத்தமாக இருந்தது" என தெரிவித்தார்.
ராஜமௌலி சொல்வதை பார்த்தால் இவர்கள் இப்படி பேசியதால் தான் தமிழை புறக்கணித்துவிட்டு ஆர்ஆர்ஆர் படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மட்டுமே ஷூட் செய்திருக்கிறாரோ?