அண்ணாத்தையால் பட்டது போதும்.. ரஜினி எடுத்த முடிவு! இது மட்டும் நடந்தால்..
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு அண்ணாத்த படம் தான் ரிலீஸ் ஆனது. அதில் சூப்பர்ஸ்டார் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. கதை சீரியல் போல இருக்கிறது என சொல்லி அதிகம் ட்ரோல் மீம்கள் வந்தன.
அதனை தொடர்ந்து சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வசூலும் குவித்து வருகிறது. மாநாடு படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெங்கட் பிரபுவை நேரில் வந்து சந்திக்கும்படி கூறி உள்ளாராம்.
இந்த சந்திப்பில் வெங்கட் பிரபு சூப்பர்ஸ்டாருக்கு கதை சொல்லலாம் என தகவல் பரவி வருகிறது. அதனால் அவர்கள் கூட்டணி சேர்ந்தால் ஒரு பெரிய மாஸ் படம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது மட்டும் நடந்தால்.. ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் தான்.