இது ஒர்கவுட் வீடியோவா, இல்ல.. அந்த மாதிரி வீடியோவா? VJ பாருவை விளாசும் நெட்டிசன்கள்
யூடியூப் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர் விஜே பாரு. அவரது வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பேரை ஈர்த்தது. அதன் பிறகு பார்வதி டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தொடங்கினார்.
ஜீ தமிழ் நடத்திய சர்வைவர் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார் அவர். ஆனால் அவரால் அதிக நாட்கள் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. காட்டில் இருந்ததால் முகம் கருப்பாகி அதிகம் உடல் பாதிப்புகள் உடன் இந்தியா வந்து சேர்ந்தார் அவர்.
தற்போது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவரது போட்டோ மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். அவர் சமீப காலமாக சற்று கிளாமர் தூக்கலாகவும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இன்று அவர் தனது ஒர்கவுட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கிளாமரான உடையில் இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், இது ஒர்கவுட் வீடியோவா இல்லை போட்டோஷூட் எடுக்க ஒரு நாள் மட்டும் ஜிம் போன வீடியோவா என கிண்டல் செய்து வருகின்றனர்.